
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை
பாஜக தான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறிய நிலையில்,அவரை நீக்க
வேண்டியிருக்கும் -அதிமுக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர்
வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட
நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம்
நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர்
வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே நேற்று அரியலூரில் செய்தியாளர்
சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர்
வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும்.
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும்
அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது
என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில்
தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்தார். ஏற்கனவே அதிமுக
முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது
பேச்சு அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில்,
பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி
வருகிறார்.கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்.முருகன்
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும்
என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment