Latest News

  

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையிலான ரயில் சேவை தொடக்கம்...!!

பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இந்த மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து, இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.

மாநாட்டில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறும் போது வங்காள தேசம் , தனது 50வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மார்ச் 26, 2021 அன்று பிரதமர் மோடி டாக்கா வருகை தர வேண்டும் என கோரினார். 1971 ஆம் ஆண்டின் வங்க தேசத்தின் விடுதலைப் போரின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும் என கூறி உள்ளார்.

ALSO READ| ஆந்திராவின் எலூருவில் ஏற்பட்ட மர்ம நோயின் மர்மம் நீங்கியது: விவரம் உள்ளே

2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ-வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார். பங்களாதேஷ் 2020 ஆம் ஆண்டை முஜிப் போர்ஷோ - பங்களாதேஷ் தேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு - என கொண்டாடியது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உரையாடலின் போது, " அண்டை நாடுகளுக்கு முக்கியட்ய்ஹ்துவம் தரும் இந்தியாவின் கொள்கையை பொறுத்தவரை, வங்கதேசம் தூணாக விளங்குகிறது என தெரிவித்தார். "பங்களாதேஷுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்த முதல் நாளிலிருந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு சவாலான ஆண்டாக உள்ளது, ஆனால் சவாலான கால கட்டத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பட்டு ஒத்துச்ழைப்பு அதிகரித்துள்ளது"என்று பிரதமர் மோடி பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மெய்நிகர் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.