
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக, கேரளாவில் உள்ள சபரிமலைக்குவார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும், ஆன்லைனில் ஏற்கனவே முன் பதிவு செய்துள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜைக்கு 6 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,சபரிமலை சாமி தரிசனத்துக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இந்த செய்தி ஐயப்ப பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது ...
No comments:
Post a Comment