Latest News

  

தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடரும்" முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சார திட்டம் தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்குகு வரவில்லை. வந்த உடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பாக இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வருகிறது. இதனால், சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விஷமத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் ஏற்கனவே பல முறை சொல்லியது போல், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை இந்த அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

 

1 comment:

  1. The King Of Dealer - The King of Dealer
    The King of Dealer. kirill-kondrashin S.A. Game. 1; 2; 3; 4. 1; 우리카지노 45; 6. 5-7; 12-13; 14-15; 17-18-19; 20-21; 21-22; 23-24-25; 26-27-28; 29-34-30. Game Information; Game Type; Game Rating

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.