புது டில்லி: அமெரிக்காவில் தேர்தல் தினத்துக்கு முன்னதாக
வாக்களிக்கும் திட்டத்தின் மூலம் இம்முறை சுமார் 10 கோடி பேர் வாக்குகளை
செலுத்தியுள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தபால் மூலம்
வாக்களித்துள்ளனர். இந்தியாவில் இளையோர் முதல் முதியோர் வரை அனைவரும்
வாக்குசாவடிக்கு சென்று தான் வாக்களிக்க முடியும். டில்லியில் மட்டும் 80
வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும்
முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா சமயம் என்பதால்
கூட்டத்துடன் கலப்பதை தவிர்க்க அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்னரே
வாக்களிப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெவ்வேறு வடிவங்களில்
அமெரிக்காவின் 43 மாநிலங்களில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.
ஏற்கனவே இவ்வசதி இருப்பினும், தற்போது இதனை பரவலாக மக்கள்
பயன்படுத்தியுள்ளனர். 2000 மற்றும் 2016-க்கு இடையிலான அமெரிக்க அதிபர்
தேர்தல்களில், முன்னரே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதத்தில்
தொடங்கி 22, 30, 31.6 மற்றும் 36.6 ஆக அதிகரித்து வந்துள்ளது. முன்னரே
வாக்களிக்கும் முறையினால் சில குறைபாடுகளும் உள்ளன. ஆரம்ப வாக்காளர்கள்
தேர்தலுக்கு பிரசாரங்களை பற்றி அறிவதற்கு முன்பே வாக்களிக்கின்றனர்.
ஏற்கனவே ராக்கெட் வேகத்தில் உயரும் பிரசார செலவுகளை இத்திட்டம் மேலும் அதிகரிக்கும். முன்னரே வாக்களிக்கும் முறை ஓட்டு சதவிகிதத்தை 4% வரை குறைப்பதாக விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய நியூசிலாந்து தேர்தலிலும் முன்னரே வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 56.7% ஆக உள்ளது. இது 2017-ல் 48% ஆக இருந்தது. தொற்றுநோய் அச்சம் காரணமாக பலர் கூட்டத்தை தவிர்க்க இம்முறையை பயன்படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில், 2013-ல் 26.4% வாக்குகள் அவ்வாறு செலுத்தப்பட்டன. அது 2019 ல் 40.1% ஆக அதிகரித்தது. ஆனால் இந்தியாவுக்கு இம்முறை நன்மைகளை விட தீமையையே அதிகம் தரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் 20 நாட்கள் தொடர்ந்து வாக்கு பதிவை நடத்துவது சாத்தியமில்லை என்கின்றனர். தபால் ஓட்டுக்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களுக்கு சுதந்திரமான சூழலை உறுதி செய்வதும் கடினம் என்கின்றனர்

No comments:
Post a Comment