நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி, தமிழ்நாடு அரசின் உள் இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவராகியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சகானா. கடந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய இவரால், மருத்துவர் சீட் கிடைக்கும் அளவுக்கான மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் பெண்ணிற்கு தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கான தொகையை வழங்கினார்.
இந்நிலையில், மாணவி சகானாவுக்கு தற்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. மாணவியின் குடும்பத்தினர் பயிற்சியளித்து உதவிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும் நன்றி கூறினர். மின் வசதி இல்லாத வீட்டிலிருந்து மருத்துவக் கனவை எட்டிப்பிடித்த மாணவி சகானாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

No comments:
Post a Comment