
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது.ஜனவரி மாதம் தேமுதி-கவின் பொதுக்குழு, செயற்குழு நடந்த பிறகு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment