புதுடில்லி: பீஹார் சட்டசபை மற்றும் பிற மாநிலங்களில் நடந்த
இடைத்தேர்தல்களில் சரியான முறையில் ஒருங்கிணைப்பு இல்லாமல் தேர்தலை
எதிர்கொண்டதே காங்., படுதோல்விக்கு காரணம் என காங்., மூத்த தலைவர்
சிதம்பரம் கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தல்
மற்றும் சில மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத் தேர்தல்களில், காங்., தோல்வி
அடைந்தது. தொடர் தோல்வி குறித்து காங்., மூத்த தலைவர்கள் சிலர்
விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு
மற்றொரு காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி, பீஹார் சட்டசபை
தேர்தலில்,ஆர்.ஜே.டி-காங்., கூட்டணி வெற்றிபெற பெருமளவு வாய்ப்பு இருந்தது.
வெற்றியை நெருங்கிய போதிலும், ஏன் தோல்வியடைந்தோம். இதே
நிலை பிற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தொடர் தோல்வி கவலை
அளிக்கிறது. இது கட்சி பலவீனமடைந்து விட்டதை காட்டுகிறது. சரியான முறையில்
ஒருங்கிணைப்பு இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டதே காங்., படுதோல்விக்கு காரணம்.
தோல்வி குறித்து விரிவான மறுஆய்வு தேவை. அமைப்பு ரீதியாக அடிமட்டத்தில் வலுவாக இருந்தால் செயல்பட முடியும் என்பதை பீகார் முடிவுகள் மூலம் சிறிய கட்சிகள் நிரூபித்துள்ளன அவைகளை போன்று காங்., கட்சியும் தனது அடிப்படை கட்டமைப்பை பலத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.முன்னதாக சமீபத்தில் காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியது, பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. இம் மாநிலத்தில், மாற்று சக்தியாக விளங்கும் நிலையை, காங்,. இழந்து நீண்டகாலமாகிவிட்டது என்றார். இந்த சூழ்நிலையில் ப.சிதம்பரம் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt

No comments:
Post a Comment