ஹைதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால், 14 வயதிலேயே பட்டதாரி ஆகி சாதனை படைத்துள்ளார்.
14 வயது சிறுவரான அகஸ்தியா சிறுவயது முதலே சுறுசுறுப்பான, படிப்பில் அதிக கவனம் செலுத்தக் கூடிய மாணவராக இருந்துள்ளார். அவரது வயதை ஒத்த மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், அவரது IQ அளவு அதிகமாக இருந்துள்ளது. அதனால் அவர் தனது 9 வயதிலேயே அதிக மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது 14 வயதில் BA Mass communication படித்து முடித்துள்ளார். அவர் தேசிய அளவிலான டென்னிஸ் வீரராகவும் உள்ளார். இதுமட்டுமல்லாமல் 1.72 விநாடிகளில் A முதல் Z டைப் செய்வது, இரண்டு கைகளை பயன்படுத்தியும் ஒரே நேரத்தில் எழுதுவது என பல திறமைகளை கொண்டுள்ளார்.
தனது சாதனை குறித்து மாணவர் கூறுகையில், 'இந்தியாவில் 14 வயதிலேயே பட்டம் பெற்ற முதல்நபர் நான்தான். வருங்காலத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்' என்றார். குழந்தைகள் அனைவரிடமும் இதேபோல் நிறைய திறமைகள் இருக்கும் என்றும், பெற்றோர்கள் அதனை கவனித்து ஊக்கப்படுத்தினால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்றும் அகஸ்தியாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment