உ.பி மாநிலம் கான்பூர் மாவட்டத்தில், மந்திரவாதி பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து நுரையீரலை எடுத்து சென்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இறந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நுரையீரல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கட்டம்பூர் பகுதியிலிருந்து இந்த சிறுமி தீபாவளியன்று இரவு காணாமல் போய் உள்ளார்.கான்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் பரசுராமுவுக்கு கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இதுவரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.இதனால், குழந்தை வரம் வேண்டி மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார். அப்போது, குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால், ஒரு சிறுமியின் நுரையீரல் வேண்டும். அதை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என மந்திரவாதி சொல்லியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை தேடி நுரையீரலை கொண்டு வரும் பொறுப்பை, தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.அவர்கள் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியின் நுரையீரலை தனியாக எடுத்து மந்திரவாதியிடம் ஒப்பைடைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று, பரசுராம், அவரது மனைவி, அங்குல் குரில், மற்றும் பீரன் ஆகியோரை கைது செய்தனர். கொடும் குற்றமான இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment