உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ அமைச்சகத்தின்கீழ் மாநில அரசின் வாயிலாக உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வரும் 2021-22 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பில் மாணவியர்களும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.
சேர்க்கைக்கான கல்வி தகுதி வயது இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர் சேர்க்கைக்கு http://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க நேற்று வரை அதாவது 19-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதனை டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது.

No comments:
Post a Comment