பீகாரில் 3ம் கட்டத் தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், 3-வது மற்றும் இறுதி கட்டமாக 78 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள நர்கட்டியாகஞ்ச் நகரில் முக்கிய வீதியில் சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பரப்புரை செய்தார். அப்போது பேசிய ஜே.பி. நட்டா, ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவாமல் டெல்லியில் தங்கி இருந்ததாகக் குற்றம்சாட்டினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், பாஜக தொண்டர்களுமே மக்களுக்கு சேவையாற்றியதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.
இதேபோல், அராரியா என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார். விவசாயிகள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என பிரதமர் மோடி கூறினாலும், சாலை வசதியே இல்லாத பீகாரில் விளைபொருட்களை விவசாயிகள் எவ்வாறு எடுத்துச் செல்வார்கள் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

No comments:
Post a Comment