தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை ஓரிரு
நாளில் நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
தெரிவித்துள்ளார். கொரோனாத்தொற்றால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள்
கல்லூரிகளில் சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் தற்போது தான் ஆன்-லைன்
விண்ணங்கள் வழியாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர்
ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நடப்பாண்டிற்கான கால்நடைமருத்துவப்படிப்பிற்கான
மாணவர் சேர்க்கைஓ ரிரு நாளில் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்
என்று தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3
கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை 15,000 பேர்
விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment