
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தென்காசியில் போராடிய காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏராளமான காங்கிரஸார் திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி, போராட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸாரை கைது செய்தனர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கொடிகளையும் போலீஸார் அகற்றினர்.
No comments:
Post a Comment