
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு விட்டதாக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவத்துறையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டும் என்றுதான் பாஜகவும் சொல்கிறது.

ஆனால், தமிழக அரசு, இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு செய்யும் முன்பே, அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது ஆளுநருக்கு எதிராக செயல்படுவாதகவே அர்த்தம். இந்த விவாகரத்தில் ஆளுநர் நிலைப்பாடு சரியானது தான். அவர் காலதாமம் செய்ததாக நான் கருதவில்லை என்றார்.
மேலும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சிலர் அரசியல் செய்கின்றனர். பிற்படுத்தப்பட்டோர் முன்னேறவேண்டும் என்பது தான் பாஜகவின் கனவு என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பாஜக - அதிமுகவுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் ஏற்கனவே நிறைய முட்டல், மோதல்கள் உள்ள நிலையில், அதிமுக மீது பாஜக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கூட்டணியில் குழப்பம் என்பதேயை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment