எபோலா
எபோலா நோய் தொற்றானது முதன் முதலில் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கி, 2013 முதல் 2016ம் ஆண்டு வரை மொத்தம் 28,610 பேரை பாதிப்புக்குள்ளாகியது. அதில் 11,300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த நோய் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கினியாவில் தொடங்கி லைபீரியா, சியரா லியோனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவியது.
இந்த தொற்றுநோய் 2016ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில், வரலாற்றில் மிக மோசமான நோய் தொற்று எபோலா என்று அறிவிக்கப்பட்டது. இது இரத்தம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்த நோய் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. இதன் அறிகுறிகள் பொதுவாக 2 முதல் 21 நாட்களுக்குள் தோன்றும். கினியாவிலும் காங்கோ ஜனநாயகக் குடியரசிலும் எபோலா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் பரிசோதனை தடுப்பூசிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ்
மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) என்பதும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குரிய எய்ட்ஸ்-ஐ பெற வழிவகுக்கிறது. இந்த நோய் முதன்முதலில் 1981ம் ஆண்டு பரவத் தொடங்கி இதுவரை 35 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி நோயானது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்களை அழிக்கிறது. அதன்மூலம், வைரஸ் படிப்படியாக உடலின் பாதுகாப்பு நெறிமுறைகளை பலவீனப்படுத்தி இறுதியில் மற்ற நோய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எய்ட்ஸ் என்பது பாதுகாப்பற்ற உடலுறவு, பாதிக்கப்பட்ட இரத்த மாற்றம், நரம்பின் மூலம் மருந்தைப் பயன்படுத்துதல், கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு, பிரசவம் அல்லது தாய்ப்பால் மூலம் பரவுகிறது.
சார்ஸ்-கோவ் நோய்த்தொற்று
கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ்) முதன்முதலில் 2002 மற்றும் 2003ம் ஆண்டிற்கு இடையில் ஆசியா மற்றும் கனடா வழியாக உருவாகி பரவத்தொடங்கியது. தற்போதுள்ள தொற்று நோயான கொரோனா வைரஸ், இந்த சார்ஸ்-கோவ் ஆல் ஏற்பட்டதாகும். மேலும் இது உலகளவில் 37 நாடுகளுக்கு சில வாரங்களில் பரவியது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், சளி, உடல் வலிகள் உள்ளன. இந்நோய் நிமோனியாவுக்கும் வழிவகுக்கக்கூடும்.
இந்த சார்ஸ் தொற்றுநோயானது நவம்பர் 2002 மற்றும் ஜூலை 2003ம் ஆண்டில், ஹாங்காங்கில் தோன்றியது. பிறகு ஒரு தொற்றுநோயாக மாற்றமடைந்து, தற்போது உலகளவில் அதிக உயிர்களைக் கொன்றுள்ளது. அதிகளவில் மக்களை பாதிப்புக்குள்ளக்கியுள்ளது.
ஹெபடைடிஸ்
ஹெபடைடிஸ் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலில் ஏற்படும் அழற்சி ஆகும். ஹெபடைடிஸ் வைரஸ் உலகளவில் 2015ம் ஆண்டு 1.34 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஹெபடைடிஸ் வைரஸ் காரணமாக இறப்பு விகிதம் இதுவரை 22% அதிகரித்துள்ளது. மேலும், ஹெபடைடிஸில் ஏ, டி மற்றும் ஈ உள்ளிட்ட ஐந்து வகை உள்ளது. இருப்பினும், ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவை இது தொடர்பான அனைத்து இறப்புகளிலும் 96% முக்கியக் காரணங்களாகும். மரணங்கள் முக்கியமாக கல்லீரல் நோய் ஏற்பட்டு நிகழ்ந்துள்ளது.
உலக மக்கள்தொகையில் சுமார் 4.4% பேர் இந்த ஹெபடைடிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பலர் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெபடைடிஸ் பி மற்றும் சி-க்கு தடுப்பூசி கிடைத்தாலும் மக்கள் ஹெபடைடிஸ் நோய் இருப்பதைக் கண்டறிய முடியவில்லை. இதன் முக்கியமாக மலிவு, சோதனை வசதி மற்றும் சிகிச்சைக்கான அணுகல் குறைவாக இருப்பதால்தான் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment