
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக சென்னை, காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்திருந்தனா். மருத்துவக் குழுவினா் அவரை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment