தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
மேற்குவங்கத்தில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் மம்தா பானர்ஜியின் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க முயற்சித்த போலீஸார் மீது பாஜகவினர் கற்களை வீசியதாக தெரிகிறது.
இதனையடுத்து போலீஸார் கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்.

தலைமை செயலகத்திற்கு அருகில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகமும் இருக்கிறது . இரண்டு நாட்களாக கொரோனா மருந்து அடிப்பதாகக் கூறி அலுவலகத்தைப் பூட்டியிருக்கின்றனர் .
இதனிடையே அவர்களின் போராட்டத்திற்கு பயந்துதான் , மம்தா தனது அலுவலகத்தைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக , பாஜகவினர் தெரிவித்துள்ளனர் .

No comments:
Post a Comment