
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 58வது குருபூஜை மற்றும் 113வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் காவல்துறை தலைவர் ராஜேஷ்தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், 2 ஐஜி, 4 டிஐஜி, 15 எஸ்பிகள், 30 ஏடிஎஸ்பி, 80 டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
100க்கும் மேற்பட்ட போலீசார் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 39 வாகன சோதனை சாவடி அமைத்தும். ட்ரோன் மூலவும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி கார்த்திக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment