Latest News

  

76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?

76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் ப்ளூ மூன் தோன்ற உள்ளது.

சாதாரணமாகவே மனிதர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் இயற்கை என்பது அதிசயம் தான். அதுவும் வானத்தில் தோன்றக் கூடிய நட்சத்திரங்களை கூட சில நேரம் பார்த்து ரசிக்க கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்திரன் அல்லது சூரியன் சிலசமயங்களில் தங்களது தகவமைப்புகள் மாற்றிக் கொள்ளும் பொழுது ஏற்படக் கூடிய அதிசய நிகழ்வு பல வருடங்களுக்கு ஒரு முறையோ, வருடங்களுக்கு ஒரு முறையோ ஏற்படும். அவ்வாறு ஏற்படக்கூடிய நிகழ்வுகளை ரசிக்காதவர்கள் உலகில் ஒருவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுபோல வருகிற அக்டோபர் 31ஆம் தேதி, அதாவது நாளை வானத்தில் ஒரு அரிய நிகழ்வு ஏற்பட இருக்கிறது.

ஹலோவீனின் பயமுறுத்தக்கூடிய இரவில் காட்டக்கூடிய நீல நிலவு வானத்தில் நாளை ஒளிர உள்ளது. ஒவ்வொரு மாதமும் தோன்றக்கூடிய பௌர்ணமி போல இருந்தாலும் இந்த நிலவு சுற்றிலும் நீல நிறமாக காட்சியளிக்கும். இது கடைசியாக 1944 ஆம் ஆண்டு உலகின் எல்லா இடத்திலும் காணப்பட்டது. அதற்குப் பிறகு 76 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டில் இந்த அரிய நிகழ்வு தற்போது நிகழவுள்ளது. வானில் தோன்றும் கூடிய சில அதிசயங்கள் ஒவ்வொரு இடங்களுக்கு தெரிவதில்லை, ஒரு சில இடங்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால் இந்த ப்ளூ மூன் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இடங்களுக்கும் இரவு நேரங்களில் தெரியும் எனக் கூறப்படுகிறது. இந்த நீல நிலவு சந்திர சுழற்சியினால் ஏற்படுகிறது எனக் கூறுகின்றனர். இது இந்தியாவில் உள்ள நமக்கு இரவு 8 மணிக்கு மேல் தெரியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின் மூலமாக தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.