ராமநாதபுரம்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தியே
தீருவோம் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக
தெரிவித்தார்.முத்துராமலிங்கமின் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு
பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து முதல்வர்
பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை
செலுத்தினர். அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நினைவிடத்தில்
மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களுக்கு
முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:முத்துராமலிங்கம்
நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம்
மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5
சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டை
இந்த ஆண்டே அமல்படுத்தியே தீருவோம். அதிமுக அரசு எந்த திட்டத்தை கொண்டு
வந்தாலும் செயல்படுத்தியே தீரும். இந்த மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும்
அரசியல் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழக அரசின் நிர்வாகம் கெட்டுப்போய் உள்ளது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டுவந்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

No comments:
Post a Comment