கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் சிகிச்சை எடுத்துவந்த 62 வயதான நபருக்கு கரோனா பிரேதப் பரிசோதனையை தினேஷ் ராவ் என்பவர் மேற்கொண்டுள்ளார். இவர், தடயவியல் நிபுணராவர்.
இதற்கு இறந்த நபரின் மூக்கு, தொண்டை மற்றும் வாய், நுரையீரல் மேற்பரப்பு ஆகிய பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாசப்பாதை, முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளனர். இதில், மூக்கு மற்றும் தொண்டை மாதிரிகள் நேர்மறையான முடிவுகளைத் தந்துள்ளது. அத்துடன், இறந்தவர் உடலில் 18 மணி நேரத்திற்கு மேல் வைரஸ் உயிருடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர் தினேஷ் ராவ் குறிப்பிடுகையில் "கரோனா தொற்றால் இறந்த நபரின் உடலைக் கையாள்வது பற்றி விரிவான தகவல்கள் தேவைப்படுகிறது. இந்த 62 வயதான நபருக்கு நுரையீரல் பாக்டீரியா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் பாதிப்பால் நுரையீரலின் தோல் நிறமாறுகிறது. 700 கிராம் எடையுள்ள நுரையீரல் 2.1 கிலோ எடையாக மாறியுள்ளது. அதுவும், ரப்பர் பந்து போன்று அதன் உருவம் மாறியுள்ளது.
இறந்தவரின் நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. எனவே நோயால் பாதிக்கப்பட்ட நபரை வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு உட்படுத்தும் முன், த்ரோம்போலிடிக் சிகிச்சை தேவை." என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தினேஷ் ராவ் "நான் இதுவரை 60,000க்கும் அதிகமான பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளேன். ஆனால், சாதாரண மனிதர்களை விட கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஐசோலார் திசுக்கள் அதிகம் சேதமடைந்துள்ளது. சுவாசப்பாதையில் ஏற்படும் வீக்கத்தைத் தவிரச் சிறுநீரகத்தின் அளவு குறுகிவிட்டது.
எனவே வைரஸ் தடுப்பு மருத்து கொடுப்பது அல்லது சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளை வெண்டிலேட்டர் பயன்பாட்டிற்கு இணைப்பது பயனில்லை என்று மட்டுமே சொல்ல முடியும்" என்று தினேஷ் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் உடலைக் கையாளும் வழியை, மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment