
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட செலவுகளுக்கே அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் இந்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பெற்றோர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் முழு கட்டணங்களை கேட்டால் feescomplaintcell@gmail.com என்ற இமெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment