Latest News

  

மரணத்தை முன்னரே உணர்ந்த எஸ்.பி.பி - சிலை செய்ய கொடுத்த ரகசியம் என்ன ?

தன்னுடைய சிலையை செய்ய எஸ். பி.பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ஆர்டர் கொடுத்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் ,ஆந்திராவை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் தன் சிலையை செய்ய ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

பின்னணி பாடகர் எஸ்.பி.பி, எதையும் முன்னரே யோசித்து செயல்படுவார் என்பது திரையுலகத்துக்கு தெரியும். அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த விவரங்கள் நன்கு தெரியும். இந்த நிலையில், தன் மரணத்தையும் எஸ்.பி.பி முன்னரே உணர்ந்திருப்பாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கொத்தபேட்டையை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை
செய்வதற்கு எஸ். பி.பி ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் உடையார் ராஜ்குமாரை தொடர்பு கொண்ட எஸ்.பி.பி தனது சிலை ஒன்றை செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சிலை செய்வதற்கு நேரில் வந்து ஆர்டர் தர முடியாது என்று கூறியதுடன், தேவையான போட்டோ ஷூட் செய்ய முடியாது என கூறி தனது புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

சிற்பி ராஜ்குமார் சிலையை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், எஸ்.பி.பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து எஸ்.பி.பி திரும்பியதும் சிலையை ஒப்படைக்க சிற்பி உடையார் ராஜ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், சிலையின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், எஸ். பி.பி இறுதிப் பயணம் நடைபெற்று விட்டது.

மரணத்தை முன்னரே உணர்ந்த எஸ்.பி.பி – சிலை செய்ய கொடுத்த ரகசியம் என்ன ?#SPBalasubrahmanyam #spbsir #spbstatue pic.twitter.com/qLAgBvfJTo

- Top Tamil News (@toptamilnews)

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.