100 ஆண்டுகள் கடந்த பள்ளிக்கூடத்தை காக்க,
குறைந்தது ஒரு மாணவரையாவது நாம் ஒவ்வொருவரும் முனைந்து சேர்த்துவிட,
சூனா வீட்டுப் பள்ளிக்கூடம் / சூனா ஸ்கூல் என அழைக்கப்படும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் 100 ஆண்டுகளாக இயஙகி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த 100 ஆண்டு வரலாற்றில் இந்த பள்ளியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அடிப்படை கல்வியை பயின்று வெளியாகி உயர் படிப்புகளுக்கும், உயர் பதவிகளுக்கும் சென்றுள்ளனர் வெளிநாடுகளிலும் சிறப்பான வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர், இனியும் செல்வார்கள் இன்ஷா அல்லாஹ்.
இந்தப் பள்ளிக்கூடம் நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல, எந்த ஒன்றையும் முதலில் உண்டாக்குவது தான் சிரமம் ஆனால் இருக்கின்ற ஒன்றை இழந்துவிட்டோமேயானால் அதை மீண்டும் கொண்டுவருவது என்பது முடியாத காரியமாகவே ஆகிவிடக்கூடும்.
நூற்றாண்டு பழமையான இந்த பள்ளிக்கூடத்தில் தற்போது வெறும் நூற்றி சொச்சம் மாணவர்களே பயின்று வருகின்றனர். இப்படி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையுமாயின் அரசாங்கம் எளிதாக இழுத்துப் பூட்டிவிடும் ஆதனால் இழப்பு நமக்கும் நம் தலைமுறைக்கும் தான், பின்பு பள்ளியை மீண்டும் கொண்டுவருதல் என்பது முடியாமலேயே ஆகிவிடலாம்.
இந்த பள்ளிக்கூடத்தில் இதன் சுற்றுவட்ட கிராம மாணவர்களும் சில ஆண்டுகள் முன்வரை பயின்று வந்தனர் அவர்களது சேர்க்கை முற்றாக நின்றுவிட்ட நிலையில் தற்போது மேலத்தெரு, கீழத்தெரு, நெசவுத்தெரு, பிலால நகர் சுற்றுவட்டாரப் பகுதி மாணவ, மாணவிகளின் சேர்க்கையை மட்டுமே இப்பள்ளிக்கூடம் பெரிதும் நம்பியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை எனும் புதிய காவிக் கொள்கை மாணவர்களின் கல்வியறிவையும் ஆர்வத்தையும் பிஞ்சிலேயே கசக்கி எறிய வஞ்சக நெஞ்சுடன் நேரம் பார்த்துக் கொண்டுள்ளது. அத்தகையவர்களுக்கு நமது ஆதரவின்மையால் பள்ளியையே முழுமையாக மூடுவதென்வது அதாவது நம் (கல்வி) கண்ணையே நாம் குத்திக் குருடாக்கி கொள்வது பாசிச வாதிகளுக்கு குரூர இன்பத்தையே தரும், இதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ பழியாகலாமா?
எனவே, நாம் ஒவ்வொருவரும் அழியும் நிலையிலுள்ள கல்விச்சொத்தை காப்பாற்ற. நமது முயற்சியின் மூலம் குறைந்தது ஒரேயொரு மாணவரையாவது நடப்பு கல்வியாண்டு முதல் இப்பள்ளியில் சேர்த்துவிட முயற்சி செய்வோம். இப்பணியை ஒவ்வொரு ஆண்டு தொடரவும் சபதமேற்போம்.
வேண்டுகோள்:
தற்போது புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது. எனவே, சுற்றுவட்டார பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு செய்து ஆர்வ்மூட்ட ஜமாத்தார்களும் இளைஞர்களும் முன்வர வேண்டும்.
அதிரை அமீன் & முஹமது மாலிக் (அபுதாபி)
No comments:
Post a Comment