
ஜார்கண்டில் கர்ப்பிணி மனைவி ஆசிரியர் தேர்வு எழுதுவதற்காக கணவர் 1,200 கி.மீ. ஸ்கூட்டர் ஓட்டி 4 மாநிலங்கள் கடந்து மத்திய பிரதேசத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார்.
ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள காந்தா டோலா கிராமத்தில் வசிப்பவர் தனஞ்சய் குமார் (வயது 27). இவரது மனைவி சோனி ஹெம்ப்ராம் (22).
இவரது மனைவி சோனி ஆசிரியர் தேர்வு குவாலியரில் உள்ள தேர்வு மையத்தில் எழுத வேண்டியிருந்தது. கரோனா காரணத்தால் பொதுப் போக்குவரத்து கிடைக்காததால் ஸ்கூட்டரில் தனது மனைவியை குவாலியர் வரை அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து குமார் கூறுகையில், கரோனா காரணமாக ரயில்கள், பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வழிகள் கிடைக்காததால், எங்கள் இரு சக்கர வாகனத்தில் சாலை வழியாக பயணிக்க முடிவு செய்தோம். கர்ப்பமாக இருக்கும் என் மனைவி ஆரம்பத்தில் இந்த கடினமான பயணத்தை மேற்கொள்ள தயங்கினார். ஆனால் எனது உறுதியைக் கண்டபின், இந்த நீண்ட பயணத்திற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
குவாலியருக்கு வருவதற்கு நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருந்தால், அதற்கு ரூ.30,000 செலவாகும். எங்களிடம் இருந்த சிறிய நகை வைத்து ரூ.10,000 தான் திரட்ட முடிந்தது. இதுவரை, நாங்கள் எங்கள் ஒரு வழி பயணத்திற்கும், இங்குள்ள தீண்டயல் நகரில் வாடகைக்கு எடுத்துள்ள ஒரு அறைக்கும் ரூ. 5,000 செலவிட்டோம் என்று கூறினார்.
இதற்கிடையே, குமார் ஒரு சமையல்காரருடன் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். ஆனால் கரோனா பொதுமுடக்கத்தால் சுமார் 3 மாதங்களாக வேலை இல்லாதது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment