உலகின் இயக்கம் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த உலகம் எப்படிப் போகும் என்று ஒருவிதமான பதற்றம் நிலவியது அதுபோல இன்றைய கொரோனா பொதுமுடக்க காலத்தையும் கருதலாம். இந்த பொருளாதார பேரிழப்பிற்குப் பிறகு உருவாகும் வாய்ப்புகளை மிகச்சரியாக கணிக்கும் முயற்சியில் அறிஞர்களும் அணைத்து நாடுகளும் இறங்கியுள்ளன.
மிக முக்கியமாக தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை தாங்களே உருவாக்கும் முயற்சியில் சில அறிவார்ந்த சமூகங்கள் ஈடுபட்டுள்ளன.அவர்கள் யாரும் தங்களது பிரச்சினைகளை சமூக வலைத்தளங்களில் அழுது புலம்புவதில்லை. அதனால் மாறிவரும் இந்த சூழலை முஸ்லிம் சமூகம் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்ற தலைமுறை போல அல்லாமல் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக் குள்ளாக்கும் இன்றைய நளைய நெருக்கடிகள் என்ன என்பதை ஓரளவிற்கு புரிந்துகொண்ட இளையதலைமுறை உருவாகி வருகிறது.அந்த நெருக்கடிகளை மிகச்சரியாக எதிர்கொள்ளும் வழிமுறையை திட்டமிட வேண்டும்.
இன்றைய முதலாளித்துவ உலகில் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் ஓரளவிற்கு தன்னிறைவு அடைந்து, ஈட்டுகின்ற பொருளாதாரத்தை தனது வசதி வாய்ப்புகளை உயர்த்திக் கொள்வதற்கு செலவிடுவதை விட சமூக மாற்றத்திற்கும் சந்ததிகளின் பாதுகாப்பிற்கும் செலவிடுகின்றனர் என்ற விழிப்புணர்வு வாழ்க்கைக்கு மாறினால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்கடிகள் பெருமளவில் குறையும். அந்த பொருளாதார தன்னிறைவை அடைவதற்கு முதலில் வேலைவாய்ப்பையும் மாதஊதியத்தையும் இலக்காக கொண்ட கல்விமுறையை மாற்றி அமைத்திட வேண்டும்.
மாத ஊதியத்தில் பொருளாதார தன்னிறைவை ஒருபோதும் எட்ட இயலாது என்பதை ஆழமாக மனதில் நிறுத்த வேண்டும்.
செல்வம் பெருக்குதல்..... அதை சந்ததிகளின் (சமூகத்தின்) பாதுகாப்பிற்கு செலவிடுதல்...... இப்படி ஒரு சமூக இலக்கு முஸ்லிம்களின் பொதுப்புத்தியாக உருவெடுக்க வேண்டும்.
இதுகுறித்த 10 நாட்கள் பயிற்சி வகுப்புதான் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஆக.2 முதல் துவங்க உள்ளது.
-----------------------------
வகுப்பிற்கு முன்பதிவு செய்திட:
Whatsap9789234073
No comments:
Post a Comment