
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியாவின் ஜிடிபி
சரிந்துள்ளது. அதாவது 23.9%. இப்படியே சென்றால் ஒரு சில மாதங்களில் அதள
பாதாளத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த
2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.3% ஜிடிபி உயர்ந்த நிலையில்,
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால்,
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்குக் காரணமாக ஜிடிபி
சரிவடைந்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன்பு ஜி20 நாடுகளில் பிரிட்டன் தான் 21.7 சதவீதம் சரிவடைந்தது. ஆனால், பிரிட்டனைக் காட்டிலும் இந்தியாவின் ஜிடிபி 23.9 சதவீதமாக உள்ளது. ஜி20 நாடுகளில் தற்போது இந்தியா தான் ஜிடிபி வீழ்ச்சியடைந்து மோசமான பொருளாதார நிலையில் உள்ளது .
இதுகுறித்து
புள்ளியில் நிபுணர் ஒருவர் கூறுகையில் , கொரோனா வைரஸ் பரவல் மற்றும்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக , பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளதாக
தெரிவித்துள்ளார் . சிறுகுறு தொழில்நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன .
கொரோனா பரவல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் .
முன்னதாக
பொருளாதரத்தை மீட்டெடுக்கும் வகையில் , ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி
விகிதம் கடந்த மார்ச் மாதம் 1.15 சதவீதம் குறைக்கப்பட்டது . இருப்பினும்
ஏமாற்றமளிக்கும் விதமாக இந்தியாவின் ஜிடிபி கடும் வீழ்ச்சியை
சந்தித்துள்ளது.
No comments:
Post a Comment