Latest News

  

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. எத்தனை எத்தனை... வியக்கத்தகு இந்தியா!

- வருணி

சென்னை: இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற தினம் 1947 ஆகஸ்ட் 15. அடிமைச் சங்கிலியின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் துவங்கிய நாள் இன்று.

இதற்கு முழு முதற் காரணமாக இருந்த தலைவர்களையும், போராட்ட வீரர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நினைவு கூர்ந்து போற்றப்பட வேண்டியது இந்தியர்களான நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க நாளில் நம் நாட்டின் வியக்கத்தகு பொக்கிஷங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளவே இந்த முயற்சி.

1. இந்தியாவின் மிக நீளமான நதி: உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கி பிறகு உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்கள் வழியாகச் சென்று இரண்டாகப் பிரிந்து மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகப் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்தியாவில் தேசிய நதியான கங்கை நதி 2,525 கி.மீ.நீளம் ஓடுவதால் இது இந்தியாவின் மிக நீளமான நதியாக அறியப்படுகிறது.

2. (அ) இந்தியாவின் மிக உயர்ந்த அணை: உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரீ அணை இந்தியாவின் மிக உயர்ந்த அணையாகக் கருதப்படுகிறது 261 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணை உலகின் எட்டாவது உயர்ந்த அணையாக அறியப்படுகிறது.

(ஆ) இந்தியாவின் மிக நீளமான அணை: ஒடிசா மாநிலத்தில் மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 26 கி.மீ.நீளம் கொண்ட ஹிராகுட் அணை இந்தியாவின் மிக நீளமான அணையாகக் கருதப்படுகிறது.

3. (அ) இந்தியாவின் மிகப் பெரும் நீர்த்தேக்கம்: மத்திய பிரதேசத்திலுள்ள கந்த்வர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்திராசாகர் நீர்த்தேக்கம் இந்தியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்படுகிறது.

(ஆ) இந்தியாவின் மிக நீளமான நீர்த்தேக்கம்: தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணையான நாகார்ஜுன சாகர் அணையின் நீர்த்தேக்கம் இந்தியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக அறியப்படுகிறது.

(இ) இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பக்ரா மற்றும் நங்கல் என்ற இரண்டு தனித் தனி அணைகள் ஒன்று சேர்ந்த பக்ரா நங்கல் அணையே "கோபிந்த் சாகர்" நீர்த்தேக்கம் உருவாகக் காரணம். இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்தேக்கத்திற்கு 10வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது.

சுதந்திரம் என்றால் என்ன

4. இந்தியாவின் மிக நீளமான கால்வாய்: 204 கி.மீ. நீளம் கொண்ட ராஜஸ்தானின் இந்திரா காந்தி கால்வாய் இந்தியாவின் மிக நீளமான கால்வாயாக அறியப்படுகிறது. இது பஞ்சாப்பின் வறண்ட நிலங்களுக்கு தண்ணிர் ஆறுகளில் இருந்து வெட்டப்பட்டன.

5. இந்தியாவின் மிகப் பெரிய ஏரி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்தி போரா மாவட்டத்தில் 200 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உலர் ஏரி ஆசிய கண்டத்திலேயே தூய நீரை கொண்டிருக்கும் மிகப் பெரிய ஏரியாக விளங்குகிறது.

6. இந்தியாவின் மிகப் பெரிய டெல்டா: உலகின் மிகப்பெரிய சுந்தர வனக் காடுகள் உருவாக்க காரணமாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தின் கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா இந்தியாவின் மிகப் பெரிய டெல்டாவாக அறியப்படுகிறது.

7. இந்தியாவின் மிகப் பெரிய இரயில் நடைமேடைகள்: உத்திர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் இரயில் நிலையம் மிக நீளமான 1,366.33 மீட்டர் நீளம் கொண்ட இரயில் நடை மேடையைப் பெற்ற இரயில் நிலையம் என்றும் இதனைத் தொடர்ந்து கேரள மாநில கொல்லம் இரயில் நிலையம் 1,180.5 மீட்டர் நீளம் கொண்ட இரயில் நடைமேடையைப் பெற்று உலகின் இரண்டாவது மிக நீண்ட நடைமேடை என்ற பெயரைப் பெற்றது.

8. இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம்: நம் நாட்டின் துறைமுகங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆகும். இதில் மிகப் பெரிய துறைமுகமாகக் கருதப்படுவது மஹாராஷ்டிரா மாநிலத்தில் நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆகும். இத்துறைமுகம் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அதிக வர்த்தகத்தை பெற்றுள்ள துறைமுகமாக அறியப்படுகிறது.

9. இந்தியாவின் மிகப் பெரிய கப்பல்தளம்: கேரள மாநிலத்தில் கொச்சின் கப்பல் தளம் இந்தியாவின் மிகப் பெரிய பராமரிப்பு வசதி கொண்ட அறியப்படுகிறது. இக்கப்பல் தளத்திற்கு மினிரத்னா அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இத்தளத்தில் 1.1 லட்சம் டன் வரை கப்பல்களைக் கட்டுவதற்கும், 1.25 லட்சம் டன் வரை கப்பல்களைப் பழுது பார்ப்பதற்கான வசதிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10. இந்தியாவின் மிக பெரிய அருங்காட்சியகம்: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய அருங்காட்சியகம் இந்தியாவின் மிக பெரிய மற்றும் உலகின் மிகப் பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

இது போன்ற பல வகையான பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது நம் இந்திய நாடு. எனவே இதன் தொடர்ச்சியை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

source: oneindia.com

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.