
மொரீசியஸ் கடற்பகுதியில் எண்ணெய் கசிவினால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியதாக கூறி ஜப்பான் கப்பலின் இந்திய கேப்டனை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து 4000 டன் எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஜப்பானை சேர்ந்த கப்பல் ஒன்று பிரேசில் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த மாதம் 25ஆம் தேதி மொரீசியஸ் வழியாக பயணித்த இந்த MV Wakashio சரக்கு கப்பல், பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த சுமார் 4000 டன் எண்ணெயில் 1000 டன் எண்ணெய் கடலில் கசிந்தது. இதனால் அப்பகுதி கடல் நீர் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதற்கு ஆதாரமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்த விபத்தை மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் நாடு தழுவிய சுற்றுச்சூழல் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். மேலும் கடலில் உள்ள எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலில் இருந்து எண்ணெய் மாசுவை அகற்ற மொரீசியஸ் அரசுக்கு உதவ தற்போது பிரான்ஸூம் முன்வந்துள்ளது.
இந்நிலையில்
இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணமான ஜப்பான் கப்பலில் இந்திய
கேப்டன் சுனில் குமார் நந்தேஷ்வரை அந்நாடு அரசு கைது செய்துள்ளது. இது
குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், நாங்கள் கப்பலின் கேபடன் மற்றும்
துணைக்கேப்டன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் ஒரு
தற்காலிக குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஏனைய குழு உறுப்பினர்கள் மீதான விசாரனையும் நாளை முதல் தொடங்கி நடைபெறும்
என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment