
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக
போடப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன்
தெரிவித்துள்ளார்.ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி
மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் ஆஸி அரசு ஓர்
ஒப்பந்தம் செய்துள்ளது.தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக
முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி
மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி
நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.ஆஸியில் இதுவரை
23,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 493 பேர்
கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
15,246 பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தனர்.
இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 220 பேர் கொரோனா தொற்றால்
பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment