
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியர் அர்ச்சனா காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்து கொண்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை சொந்த ஊரான நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அவரது உடலை அடக்கம் செய்ய அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழிக்கு அருகே சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை புதைத்தால் தொற்று ஏற்படும் என ஏற்கனவே சைமன் என்ற மருத்துவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில், செவிலியர் அர்ச்சனாவின் சடலத்துடன் உறவினர்கள் 2 மணி நேரம் காத்திருந்து , பின்னர் அரசு அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் பொதுமக்கள் உடலை புதைக்க சம்மதம் தெரிவித்தனர். கொரோனாவால் மனிதநேயம் மங்கி வருவது இது போன்ற சம்பவங்களால் வெளிச்சத்திற்கு வருகிறது.
Newstm.in
No comments:
Post a Comment