
தமிழகத்தில் இன்று 5,609 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் 1,021 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு 100-ஐத் தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.63 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில் மரண எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,608 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சமநிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 32 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,87,533.
தமிழகத்தில் உயிரிழப்பு 4,241-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,241 பேரில் சென்னையில் மட்டுமே 2,176 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த 3 நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 90-ஐத் தாண்டிய நிலையில் இன்று முதன்முறையாக 100 தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன, உலகளவில் பெரு நகரங்களில் அதிக பரிசோதனை மேற்கோண்டதில் பெருநகர சென்னை மாநகராட்சியே முதலிடம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் நபர்களில் 87,000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன (87,000 test per million). நாள்தோறும் சென்னையில் மட்டும் 12,000 முதல் 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மொத்த உயிரிழப்பில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் டெல்லி 1,37,677 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,34,819 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 92,921 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 75,516 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 66,677 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 63,652 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 57,024 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.
* தற்போது 59 அரசு ஆய்வகங்கள், 63 தனியார் ஆய்வகங்கள் என 122 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,698. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 21.5 சதவீதம் ஆகும்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28,37,273. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 58,211. இது .07 சதவீதம் ஆகும்.
* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.6 சதவீதம்.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,63,222.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,609.
* மொத்தம் (2,63,222) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,59,435 பேர் (60.5%) / பெண்கள் 1,03,760 பேர் (39.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%).
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,295 (58.7 %) பேர். பெண்கள் 2,314 பேர் (41.2 %) பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,800 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,02,283 பேர் (76.8 %).
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 109 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,241 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,176 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 109 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 14 பேர் ஆவர். இது 12.8 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 5 பேர். இதில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமியும், 17 வயது இளைஞரும், மதுரையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 88 பேர் (80.7%). பெண்கள் 21 (19.2%) பேர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 102 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,588.
இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 39.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 60.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 15,657, திருவள்ளூர் 14,750, மதுரை 11,455, காஞ்சிபுரம் 10,095, விருதுநகர் 8,843, தூத்துக்குடி 7,846, திருவண்ணாமலை 6,660, வேலூர் 6,376, திருநெல்வேலி 5,641, தேனி 5,969, ராணிப்பேட்டை 5,852, கன்னியாகுமரி 5,307, கோவை 5,458, திருச்சி 4,517, கள்ளக்குறிச்சி 3,906, சேலம் 3,868, விழுப்புரம் 4,112, ராமநாதபுரம் 3,400, கடலூர் 3,582, தஞ்சாவூர் 3,154, திண்டுக்கல் 3,066 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
8 மாவட்டங்களில் மொத்த தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 25 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையைத் தொடர்ந்து காஞ்சிபுரமும் தொற்று எண்ணிக்கை 5 இலக்க எண்ணிக்கையில் இணைந்துள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 13,044 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,830 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 6,214 பேர் (47.6%).
13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,17,207 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,32,229 பேர். (60.8%) பெண்கள் 84,951 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).
60 வயதுக்கு மேற்பட்டோர் 32,971 பேர் (12.5%). இதில் ஆண்கள் 20,376 பேர் (61.7%). பெண்கள் 12,595 பேர் (38.3 %).
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment