
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை அடுத்துள்ள கடங்கலூரை சேர்ந்தவர்கள் நந்தினி- ராஜு தம்பதி. கூலி தொழிலாளிகளான இத்தம்பதி தங்கள் 3 வயது மகன் பிருத்விராஜ் என ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென நாணயம் ஒன்றை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர், ஆலுவா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்,
அங்கே எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் குழந்தையை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை சிறப்பு நிபுணர்கள் எக்ஸ்ரேயை ஆய்வு செய்ததில், குழந்தை விழுங்கிய நாணயம், குழந்தையின் மலக்குடலுக்குள் வந்து ஆசன வாயில் அருகே உள்ளது. தானாக வெளிவந்து விடும் அறுவை சிசிச்சை தேவையிலை என கூறியதாக தெரிகிறது.
குழந்தையை அவர்கள் வீட்டிற்கு கொண்டுவந்து கவனித்துக்கொண்டனர். ஆனால் மறுநாள் குழந்தையின் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் ஆலுவா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மூன்று அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை புறக்கணிக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்தது என பெற்றோர் குற்றச்சாட்டி அங்கு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து நேற்று குழந்தையின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அப்போது குழந்தையின் வயிற்றில் ஒரு 1 ரூபாய் நாணயம் மட்டிமின்றி, மற்றொரு 50 பைசா நாணயம் இருந்தது தெரியவந்தது.
மருத்துவமனைக்கு சென்ற முதல் நாளே மருத்துவர்கள் அலட்சியம் இன்றி சிகிச்சை அளித்திருந்தால் மகனை காப்பாற்றியிருக்கலாம் என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment