
வீட்டில் தனிமைப்படுத்தலை கோருபவர்களுககு, சம்பந்தப்பட்ட வீட்டில் அவர்களுக்கென தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறுகிறது.
நோய்த்தொற்று பாதிப்பு இடங்களை கண்டறிந்து அதிக அளவில் மருத்துவ முகாம்களை நடத்திடவும், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிடவும், கிராம மற்றும் நகர்புறங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தவும் வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கல், கிராமப்புற செவிலியர்களை அதிகளவில் பயன்படுத்தி வீடுவீடாகச் சென்று குடும்ப உறுப்பினர்களில் சர்க்கரை வியாதி, ரத்தஅழுத்தம், சிறுநீரகக் கோளாறு , இதய நோய் சம்பந்தப்பட்ட நபர்கள், கர்ப்பிணகள் மற்றும் 5 வயதுக்குட்பட்டவர்கள் குறித்த விபரங்களை கணக்கெடுப்பு செய்து மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம்களில் சத்து மாத்திரைகள் , கபசுரக்குடிடிநீர் , சளி, இருமல், காய்ச்சலுக்கான மருந்து மாதிதிரைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திடவும் போதுமான அளவு மருந்து மாத்திரைகளை கையிருப்பு வைத்திடவும் வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடவடிக்கைள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை உள்ளாட்சி துறை மூலம் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தலை கோருபவர்களுககு, சம்பந்தப்பட்ட வீட்டில் அவர்களுக்கென தனிஅறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் கண்ண்ன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment