புதுடில்லி: காங்கிரஸ் பொதுசெயலர் பிரியங்கா இம்மாத இறுதிக்குள், அரசு
பங்களாவை காலி செய்துவிட்டு, ஹரியானாவில் குடியேற உள்ளார்.காங்., தலைவர்
சோனியாவின் மகளும் காங்., பொதுச்செயலருமான பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு
வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட்
பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின்
பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா
ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி
பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. ஆகவே பங்களாவை ஜூலை
31க்குள் காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை
செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ்
அனுப்பியது.இந்நிலையில், பிரியங்கா ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:
பிரியங்கா, இம்மாத இறுதிக்குள் அரசு பங்களாவை காலி செய்வார். பின்னர்
சிறிது காலம் ஹரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 ல் டிஎல்எப்
அராலியாவில் உள்ள வீட்டில் தங்கியிருப்பார்.
தற்போது அவர் டில்லியில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.
விரைவில் வீடு இறுதி செய்யப்பட்டு அங்கு குடியேறுவார்.டில்லியின் சுஜன்
சிங் பூங்கா அருகில் உள்ள வீடு ஒன்று அவருக்கு பிடித்துள்ளது. தற்போது,
அங்கு சில மராமத்து பணிகள் நடக்கின்றன. அது ஓரிரு மாதங்களில் நிறைவு
பெறும்.
அதன் பின்னர் பிரியங்கா, அந்த வீட்டில் குடியேறுவார். அதுவரை குருகிராமில் தங்கியிருப்பார்.அரசு பங்களாவில் இருந்து பெரும்பாலான பொருட்கள் குருகிராம் சென்றுவிட்டன. பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வும் முடிந்துவிட்டது. வீடு மாறுவது குறித்து பிரியங்கா தகவல் தெரிவித்தவுடன், சிஆர்பிஎப் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னதாக, லக்னோவில் உள்ள உறவினர் வீட்டில் பிரியங்கா குடியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உ.பி., மாநில பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் அங்கு செல்லும் போது, அந்த வீட்டை பயன்படுத்தி கொள்வார் என தெரிகிறது. விரைவில் உ.பி., சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இனி வரும் காலங்களில் பிரியங்கா பெரும்பாலும் உ.பி.,யில்தான் தங்கியிருக்கு முடிவு செய்துள்ளார். இதனால், அந்த வீடு அவரது அரசியல் அலுவலகமாக மாறும் நிலை உள்ளது.மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், அது குறித்து பிரியங்கா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டதாக வெளியான தகவலை பிரியங்கா மறுத்திருந்தார்.

No comments:
Post a Comment