
மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. இதையடுத்து அங்கு கூடிய திமுக, திக, விசிக, மதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, போத்தனூரைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) தானாக முன் வந்து போலீசில் சரண் அடைந்தார். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இதற்குப் பின்னர் சேலத்தில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போர்த்துவதற்கு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment