சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில்
ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொள்ளுவதற்கு ஏதுவாக மருத்துவர்,
செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்கிடாக்கி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள்
சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் உள்ளே பல
இடங்களில் தொலைபேசிகளுக்கு போதிய அளவு நெட்வொர்க் கிடைப்பதில்லை என்பதால்,
அவசர காலத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையளிக்கவும், குறிப்பாக திடீர் மூச்சுத் திணறல்,
போன்றவை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவர்களை அணுக
செவிலியர்களுக்கும், ஊழியர்களுக்கும் வாக்கிடாக்கி மற்றும் ஆண்ட்ராய்டு
செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக எந்த மருத்துவரையும் செவிலியர்கள் எளிதாக
தொடர்பு கொள்வதுடன் நோயாளிகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை அளிக்க
முடிவதாகவும் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment