Latest News

வரலாற்று சின்னங்களை ஜூலை 6ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை ஜூலை 6ஆம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தாஜ்மஹால், செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள், வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் 
 
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊடரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் உள்ள 3000 க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் கடந்த மார்ச் முதல் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. 

முதல் கட்ட ஊரடங்கு தளர்வின்போது இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் கீழ் உள்ள சுமார் 820 மதத்தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் நாட்டில் கரோனாவால் மூடப்பட்டுள்ள செங்கோட்டை, தாஜ்மஹால் உள்ளிட்ட 3000 நினைவுச் சின்னங்கள் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளன. இந்த தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பிரல்ஹாத் சிங் படேல் ட்விட்டரில் அறிவித்தார். கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மாஸ்க் அணியவேண்டும் ஆகியவற்றை பின்பற்றி வரலாற்று சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்களை திறப்ப்பதன் மூலம் அரசுக்கு வருமானம் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.