
டெல்லி: கொரோனா அன்லாக் 3.0 விதிமுறை மூலம் இனி ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூட அன்லாக் 2.0 செயல்பாடுகள் அமலில் உள்ளது. இந்த இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஜூலை 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது.
இதனால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. பல முக்கிய தளர்வுகளுடன் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா அன்லாக் 3.0 விதிமுறை மூலம் இனி ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யோகா மட்டும் ஜிம்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம். ஆனால் கண்டிப்பாக இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அன்லாக் 3.0.. இனி இரவு நேர லாக்டவுன் கிடையாது.. அமலுக்கு வரும் தளர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
பல நாட்களாக வைக்கப்பட்ட கோரிக்கை என்பதால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திரையரங்குகள் எப்போதும் போல இயங்காது. தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
source: oneindia.com
No comments:
Post a Comment