
11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் 12ம் வகுப்பு மறு வாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் மாதம் நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் www.tnresult.nic. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கெள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு வசதியாக அவர்கள் பயின்ற பள்ளி பதிசெய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கும் அனுப்பப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment