இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைத்
தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில், 93 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக 65 வயதுப் பெண்
ஒருவர் இறந்தார். மத்தியப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, ஒரே ஒரு சர்வதேச
விமானம்தான் இந்த மாநிலத்துக்குள் வருகிறது. இந்தூரிலிருந்து துபாய்க்கு
அந்த விமானம் சென்று வருகிறது.

கடந்த 22-ம் தேதியுடன் இந்த விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, இந்தூரில் தத்பாக்கி பாக்கல் என்ற குடிசைப்
பகுதியில் ஒரு சிலருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், 65 வயது ஆண் ஒருவர் பலியானார். இந்தப் பகுதியில் கொரோனாவால்
பாதிக்கப்பட்ட யாரும் வெளிநாடுகளுக்குச் சென்று வரவில்லை.
அப்படியிருக்கையில், இவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது
குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழம்பினர்.
அவர்கள் எங்கெங்கு
சென்று வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழுவினர்
சென்றனர். இதற்கிடையே, நல்ல ஆரோக்கியமான மக்களைப் பிடித்துக்கொண்டு போய் கொரோனா
வைரஸ் ஊசி போடுவதாக சிலர் வாட்ஸ்அப்பில் போலி வீடியோவை அந்தப் பகுதி
மக்களிடத்தில் பரப்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் தெரியாமல்
மருத்துவக்குழுவினர் அங்கு சென்று இறந்து போன 65 வயது ஆண் சார்ந்த குடும்ப
உறுப்பினர்களிடத்தில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது,
திடீரென்று 100- க்கு மேற்பட்டவர்கள் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் , மருத்துவத்துறை ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
ஷிவ்ராஜ் சிங் சௌகான் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மருத்துவத்துறை
ஊழியர்களை மக்கள் தாக்கியதற்கு போலி வீடியோவே காரணம் என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், போலி வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பிய 4
பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
''மருத்துவப்
பணியாளர்களை பணியைச் செய்யவிடாமல் தடுப்பவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு
ஆளாவார்கள்'' என்று மத்தியபிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான்
எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment