தமிழகத்தில் சலூன் கடைகளை திறக்க அனுமதி என்று வெளியான தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில்
ஊரடங்கு நிலை அமலில் உள்ளது. இதனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள்
உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை முதல் சலூன் கடைகளுக்கு காலை
7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக
காவல்துறையின் அறிவிப்பு என்ற பெயரில் ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில்
பரவியது.

மேலும்,
மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது என்றும்,
ஆம்புலன்ஸில் செல்ல வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவல்கள் செய்திகளாக வெளியான நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு
வெளியிடும் அறிவிப்புகள் உரிய முறையில் வரும் என்றும், சமூக வலைதளங்களில்
பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
newstm.in

No comments:
Post a Comment