கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு 21
நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. மருத்துவர்கள், மாநில
முதல்வர்கள், விளையாட்டு பிரபலங்களுடன் கடந்த சில நாள்களாக பிரதமர்
நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் பேசிவருகிறார். சித்தா, ஆயுர்வேதா
மருத்துவர்களிடம் உரையாற்றிய மோடி அவர்களிடம் இருந்து ஆலோசனைகளை
கேட்டுப்பெற்றார். இதனையடுத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம்
உரையாற்றினார். 21 நாள்கள் ஊரடங்கு உத்தரை எப்படி எடுத்துசெல்வது.
மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்தியாவில்
உள்ள 40 விளையாட்டு பிரபலங்களுடன் ஆலோசனை நடத்திய மோடி, `லாக்டவுண்
காலங்களில் மக்களின் உடல்நலம் மற்றும் மனநலம் மிகவும் முக்கியம்.
மக்களிடம் நேர்மறையான கருத்துக்களை எடுத்துச்செல்லுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில்
பிரதமர் நரேந்திர மோடி இன்று முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்
மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மற்றும் தொலைபேசி வாயிலாக பேசியதாக
கூறப்படுகிறது.
முன்னாள்
குடியரசு தலைவர்கள் பிரனாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், முன்னாள்
பிரதமர்களாக தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக
ஆலோசனை நடத்தியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா
முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா
முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சமாஜ்வாதிக் கட்சியின் முலாயம் சிங் ,
அகிலேஷ் யாதவ் மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பிரதமர்
மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
தி.மு.க
தலைவர் ஸ்டாலின் உடனான உரையாடலின்போது தயாளுஅம்மாளின் உடல்நலம் குறித்து
மோடி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவலைத்
தடுப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து
ஆலோசித்ததாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி
அனைத்து கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 5 எம்.பிக்களுக்கு மேல் உள்ள அனைத்துகட்சி தலைவர்களுடனும்
காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக பல்வேறு கட்சித்
தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாட்டின்
சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம்
என்று தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில்
பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் அழைப்பு
விடுத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பல்வேறு
கட்சிகள் பிரதமரின் இந்த அழைப்பை ஏற்றுள்ள நிலையில், `வீடியோ கான்ஃப்ரஸ்
கூட்டத்தில் எல்லாம் பங்கேற்க முடியாது' என திரிணாமூல் காங்கிரஸ்
தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment