வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா
நோய்த்தொற்றுக்கு மத்தியில் மாநில பொருளாதாரங்களை மீண்டும் மீட்பதற்கான
வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், கரோனா பாதிப்பு இல்லாத
இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான பொறுப்பை மாநில
ஆளுநர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அமெரிக்காவில்
கரோனா நோய்த்தொற்று பாதிப்பும், பலியும் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை
நோய்த்தொற்றுக்கு 6,77,570 பாதிக்கப்பட்டுள்ளனர், 34 ஆயிரத்து 641 பேர்
உயிரிழந்துள்ளனர். ஆனால் 57 ஆயிரத்து 844 ஆயிரத்து நோய்த்தொற்று பாதிப்பில்
இருந்து குணமடைந்துள்ளனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக
விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் அமெரிக்காவின் பொருளாதாரமும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற
கரோனா தடுப்புப் பணிக்குழு மாநாட்டில், நம்முடைய அடுத்த போர்
அமெரிக்காவில் மீண்டும் பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்வதுதான் என்று
தெரிவித்த டிரம்ப், அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் இயல்புபாதைக்கு
கொண்டுவருவதற்கான 3 கட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட டிரம்ப், மாநிலங்கள்
படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக்கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் உதவியுடன்
அந்தந்த மாநில ஆளுநர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்று
தெரிவித்துள்ளார்.
அதில் முதல் கட்டமாக ஊரடங்கு
நடவடிக்கையில் இருக்கும் மாநில மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க
வேண்டும், கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். உணவகங்கள்,
வழிபாட்டு தலங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் கட்டும்
கட்டுப்பாடுகளுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இரண்டாம்
கட்டத்தில், நோய்த்தொற்று மீண்டும் பரவாது என வாய்ப்புள்ள இடங்களில்
மக்கள் தங்களின் அத்தியாவசியமற்ற பயணத்தை மீண்டும் தொடங்கலாம். 50 அல்லது
அதற்கு மேற்பட்டவர்கள் கூடிய பொதுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்,
பள்ளிகள் மற்றும் பகல்நேர மதுபான பார்களை மீண்டும் இயக்கலாம்.
மூன்றாம்
கட்டத்தில், நோய்த்தொற்று பரவுவது குறைந்து வருவது, அதன் வளைகோடு சமமானதாக
தெரிந்தால், மக்கள் சக மக்களோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் பொது
இடங்களில் அனுமதிக்கலாம். ஆனால் சமூக இடைவெளி அவசியம். பணியிடங்களில் சமூக
இடைவெளியை கடைபிடிக்கலாம் ஆனால் கட்டுப்பாடு இருக்காது, மருத்துவமனைகள்,
பாதுகாப்பு இல்லங்கள் தடையின்றி இயங்கலாம், மதுபான விடுதிகளில்
செயல்பாடுகளை அதிகரிக்கலாம்.
இதில் பாதிப்பு குறைந்த
மாநிலங்கள் இந்த செயல்திட்டங்களை உடனடியாக அமல்படுத்தலாம் நோய்த்தொற்று
பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்கள் நீண்ட காலம் காத்திருந்து
அமல்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment