
சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா மட்டுமல்லாமல் உலக
நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களை
வீட்டுக்குள் இருத்தி வைக்க காவல்துறையினர் கடும் போராட்டம் நடத்தி
வருகிறார்கள்.
பல்வேறு மாநிலங்களிலும் தடை உத்தரவை மீறி வெளியே
வரும் பொது மக்களுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி, அதனை சமூக
வலைத்தளங்களிலும் காவல்துறையினர் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் ஊர்
சுற்றும் நோக்கில் யாரும் வெளியே வரக் கூடாது என்பதை மக்களுக்கு புரிய
வைக்க காவல்துறையினர் முயல்கிறார்கள்.
அதே
சமயம், சென்னை காவல்துறையினர், கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.
தங்களது தலைக்கவசத்தின் மேற்பகுதியை கரோனா வைரஸ் போல
மாற்றி, அதனை தலையில் மாட்டிக் கொண்டு, வாகன ஓட்டிகளிடம் சென்று கரோனா
வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
உடைந்த தலைக்கவசத்தின் மீது வண்ணப் பேப்பர்களை ஒட்டி கரோனா போல உருவாக்கியதாக கைவினைக் கலைஞர் கௌதம் கூறியுள்ளார்.
பல்வேறு
பகுதி காவலர்களும் கரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு விஷயங்களை
செய்கிறார்கள். எங்கள் தரப்பில் இதைச் செய்யலாம் என்று முடிவெடுத்து
செயல்படுத்தியதாகக் கூறும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் பாபு கூறுகிறார்.
வாகன
ஓட்டிகளிடம் பேசும் போது இந்த ஹெல்மெடடை போட்டுக் கொண்டு பேசும் போது
அவர்களுக்கு ஓரளவுக்கு நிலைமையின் தீவிரம் புரியும் என்கிறார்
நம்பிக்கையோடு.
No comments:
Post a Comment