
பெய்ஜிங்: கொரோனாவின் தாக்குதலால் சீனாவின் வுகான் மாகாணத்தில்
செத்து மடிந்த பொதுமக்களின் எண்ணிக்கை 2,500 என்கிறது அந்நாட்டு அரசு.
ஆனால் மரணித்தோர் எண்ணிக்கை இதைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என
சந்தேகம் எழுப்பப்படுகிறது.
சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் கொரோனா
வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. அந்த மாகாணத்தில் 2,500 பேரை பலி கொண்ட
கொரோனாவின் தாக்கம் திடீரென அங்கு குறைந்தது.
ஆனால் உலக நாடுகளில்
மிகப் பெரும் பேரழிவை கொரோனா உருவாக்கி வருகிறது. உலகம் முழுவதும்
பல்லாயிரக்கணக்கான பேரை பலி கொண்டு வருகிறது கொரோனா. இதன் உக்கிரம்
இன்னமும் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் வுகான் மாகாணத்தில் மயானங்களில் தொடர்ந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகங்களை
கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் ஆய்வு
மேற்கொண்டன.
இதனடிப்படையில்
வுகான் மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவின் அதிகாரப்பூர்வ
எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
source: oneindia.com
No comments:
Post a Comment