
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை
உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர
வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி பகுதியைச்
சேர்ந்த இளைஞர் 144 தடை உத்தரவை மீறி மாஸ்க், ஹெல்மெட் போடாமல் பைக்கில்
சுற்றி வந்துள்ளார்.
அவரை பிடித்த போலீசார் அவரிடம் 144 தடை உத்தரவு குறித்து எடுத்து கூறியுள்ளனர்.
அதற்கு அந்த இளைஞர், முதல்வரை வரச் சொல்லுங்கள், கொரோனா வைரஸை கண்ணில்
காட்ட சொல்லுங்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அடுக்கு
மொழியில் பேசி எரிச்சலை மூட்டியுள்ளார்.
இதனால் கடுப்பான அறந்தாங்கி போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தகுந்த முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment