சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக சென்னையில் 24 ஆயிரம்
பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீன்வளத்துறை
அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் இபிஎஸ்
கூறியது போல விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள். அப்போது
தான் தொற்று பரவுதலில் இருந்து நம்மை காக்க முடியும். ஒழிக்க முடியாத
சின்னம்மை, போலியோ போன்றவற்றை இந்தியா சவாலாக எதிர்கொண்டு ஒழித்துள்ளது.
அதுபோல கண்ணுக்கு தெரியாத கொரோனாவையும் ஒழிப்போம். கொரோனாவை விரட்டியடிக்க
அரசின் அறிவுரைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.ஒவ்வொருவரும் 3 மீட்டர்
இடைவெளியை பின்பற்றுங்கள்.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி வாங்கும் அனைத்து ரேசன்
கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். சென்னை மாநகராட்சியில் சார்பில்
கொரோனா வைரஸ் குறித்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக
044-25384520 என்ற சிறப்பு எண் அறிமுகப்பட்டு, கொரோனா பற்றிய விழிப்புணர்வு
அல்லது சந்தேகங்கள் குறித்து மக்கள் கேட்கலாம்.
இதுவரை 2 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.சென்னையில் இதுவரை 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2064 பேர் அரசின் காப்பங்கங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி முழுவதும் சுகாதாரத்தை பேணி காக்க, கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment