
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேறு வழியே இல்லை, லாக் டவுன் தான் ஒரே
வழிமுறை என்று சீனாவும் உலகச் சுகாதார அமைப்பும் வழிகாட்டியுள்ளன.
சமூகவிலகல், தொடர்பிழத்தல்தான் பரவலை முதற்கட்டமாக தவிர்க்கும் வழி என்று
கூறப்பட்டுள்ள நிலையில் பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாடக்
கூலித் தொழிலாளர்கள் உட்பட பல ஏழைகள் டெல்லியின் தேசிய நெடுஞ்சாலை எண்
8-ல் குழந்தைகள், மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி வருகின்றனர். தேசிய
நெடுஞ்சாலை எண் 8 டெல்லியையும் ஜெய்பூரையும் இணைப்பதாகும். இவர்கள் சவாய்
மாதோபூர், அயோத்தி, கன்னவ்ஜ் என்று தங்கள் ஊர் தேடி சென்று
கொண்டிருக்கின்றனர்.
மிகவும்
சுறுசுறுப்பாக வாகனங்களுடன், நெரிசலாகக் காணப்படும் தேசிய நெடுஞ்சாலை எண் 8
இவர்கள் தவிர, ஆங்காங்கே கால்நடைகளைத் தவிர வெறிச்சோடிக் காணப்படுகிறது.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை நடந்தபடியே கடந்து
செல்கின்றனர். தூரங்கள் இவர்களை அச்சப்படுத்தவில்லை. இந்தியாவின்
பரந்துபட்ட மக்கள் தொகையில் ஒரு பகுதியினர் நகரத் தொடங்கி விட்டனர்.
'குருகிராம்
டி.எல்.எஃப். பேஸ் 2விலிருந்து இன்று காலை நடக்கத் தொடங்கினோம். சவாய்
மாதவ்பூர் மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்குச் செல்ல வேண்டும்.
இங்கிருந்து 550 கிமீ தூரத்தில் உள்ளது' என்று நெடுஞ்சாலையில் சென்ற
நர்சிங் லால் என்பவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை'
என்றார்.
பரிதாபாத்திலிருந்து பிஹாருக்கு இரவோடு இரவாக
ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர் என்ற தகவலும்
அரசாங்கத்துக்கு பெரிய தலைவலிகளை உருவாக்கியுள்ளது, மாநிலங்கள் மக்கள்
கூட்டம் கூட்டமாக வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனேசர் சவுக்கில் குழந்தைகள், ஆண்கள்,
பெண்கள் உத்தரப்பிரதேச கன்னவ்ஜ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிலருக்கு ஆங்காங்கே நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க்குகளில் சிறிது உணவோ பழங்களோ
அளிக்கப்பட்டு வருகின்றன.
இன்னும் எத்தனை நாட்கள் நடைபயணம் தொடருமோ என்ற கவலைகள் ஏற்பட்டுள்ளன.
No comments:
Post a Comment